ரூ. 20 கோடியில் பொழிவு பெறும் உக்கடம்: ஆணையர் ஆய்வு!

72பார்த்தது
ரூ. 20 கோடியில் பொழிவு பெறும் உக்கடம்: ஆணையர் ஆய்வு!
ரூ. 20 கோடியில் பொழிவு பெறும் உக்கடம்: ஆணையர் ஆய்வு!

கோவை: கோவை உக்கடம் பகுதியில் மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மாதத்தில் மேம்பாலம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே பொள்ளாச்சியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் உக்கடம் பேருந்து நிலையம் ரூ. 20 கோடியில் மேம்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார்.

அந்த வகையில் தற்போது உக்கடம் பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வசதிகள் தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. கட்டுமானப் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது மாநகர தலைமை பொறியாளர் அன்பழகன், நகரமைப்பு அலுவலர் குமார், நெடுஞ்சாலை உதவி கோட்டப்பொறியாளர் மணிவண்ணன், மாநகராட்சி செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி பொறியாளர் சதீஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

டேக்ஸ் :