கோவை ரத்தினபுரி புதிய காவல் நிலையத்தில் இன்று நடைபெற்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்ற கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள அறைகளை நேரில் பார்வையிட்டார். பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர், புதிய காவல் நிலையம் மூலமாக பொதுமக்களுக்கு சிறப்பான சேவை அளிக்கமுடியும் என உறுதி அளித்தார்.