நெல்லிக்காய் என நினைத்து விஷக்காயை சாப்பிட்ட குழந்தைகள்..

41771பார்த்தது
நெல்லிக்காய் என நினைத்து விஷக்காயை சாப்பிட்ட குழந்தைகள்..
திருப்பூரில் நெல்லிக்காய் என நினைத்து விஷக்காயை சாப்பிட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாராபுரம் பொன்னிவாடி கிராமத்தில் விளையாடிக்கொண்டிருந்த யோகிதா (6), சித்தார்த் (4), மோனா ஸ்ரீ(4), கவினேஷ்(3) ஆகிய நான்கு குழந்தைகளும் நெல்லிக்காய் என்று நினைத்து காட்டாங்காய் என கூறப்படும் விஷக்காயை சாப்பிட்டு வீட்டுக்குச் சென்ற போது திடீரென குழந்தைகள் வாந்தி எடுத்ததால் பெற்றோர்கள் அச்சம் அடைந்தனர். குழந்தைகளை உடனடியாக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை மேற்கொண்டனர். குழந்தைகள் விஷக்காயை சாப்பிட்டதால் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது பரிசோதனையில் தெரிய வந்தது. மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் .

தொடர்புடைய செய்தி