பாஜக அமைச்சருக்கு முதல்வர் கடும் கண்டனம்

595பார்த்தது
பாஜக அமைச்சருக்கு முதல்வர் கடும் கண்டனம்
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் தமிழகத்திற்கு தொடர்பு உள்ளது என பாஜக மத்திய இணையமைச்சர் ஷோபா கூறியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவித்துள்ளார். அதில், மத்திய அமைச்சரின் இந்த பேச்சுக்கு நான் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். பாஜகவின் இந்த பிளவுபடுத்தும் பேச்சை தமிழர்களும் கன்னடியர்களும் மறுப்பார்கள். அமைதி, நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய ஷோபா மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். பாஜகவினர் இந்த பிளவுவாத பேச்சை உடனே நிறுத்தவேண்டும் என கூறியுள்ளார்.