தமிழ் திரையுலகிலும் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்படுவதாக நடிகை ஊர்வசி குற்றச்சாட்டு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள திரையுலகம் போல தமிழ் திரையுலகில் நடக்கும் பாலியல் தொந்தரவு குறித்து பேச யாரும் முன் வருவதில்லை என்றும், இதனால் தமிழ் திரையுலகில் எதுவும் நடக்கவில்லை எனக் கூறிவிட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். மூத்த நடிகை ஊர்வசி தமிழ் திரையுலகிலும் பாலியல் தொந்தரவு உள்ளது என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.