ராகுல் காந்திக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

66பார்த்தது
நாட்டு மக்கள் மீதான உங்களின் அர்ப்பணிப்பு உங்களை உயரிய இடத்துக்கு அழைத்துச் செல்லும் என்று முதல்வர் ஸ்டாலின் காங்கிரஸ் எம். பி ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம். பியும், இண்டியா கூட்டணியின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்திக்கு இன்று (ஜூன் 19) பிறந்தநாள். அதனை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ராகுல் காந்திக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்து செய்தியில், “பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்புச் சகோதரர் ராகுல் காந்தி. நாட்டு மக்கள் மீதான உங்களின் அர்ப்பணிப்பு உங்களை உயரிய இடத்துக்கு அழைத்துச் செல்லும். நீங்கள் தொடர்ந்து முன்னேறவும், வெற்றியடையவும் எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் பதிவுடன் ராகுல் காந்தி வீடியோ பதிவு ஒன்றையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில், ராகுல் காந்தி ஸ்டாலினை சகோதரன் அழைத்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
Job Suitcase

Jobs near you