சென்னை: மீனவர்களின் கண்ணீரை துடைக்க முன்வர வேண்டும்: மநீம கோரிக்கை

85பார்த்தது
சென்னை: மீனவர்களின் கண்ணீரை துடைக்க முன்வர வேண்டும்: மநீம கோரிக்கை
இலங்கை கடற்படையினரால் ஏற்படும் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மநீம மீனவர் அணியின் மாநில செயலாளர் ஆர். பிரதீப் குமார் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகெங்கும் பல்வேறு இடங்களில் மீன்பிடி வளங்கள் நாசமாக்கப்பட்டு வருகின்றன. வெவ்வேறு பிரச்சினைகளுக்கு நடுவில் வாழ்க்கையே போர்க்களமாகத்தான் மீனவர்களின் வாழ்வு நீடிக்கிறது. 

பொருளாதாரச் சிரமங்கள் மட்டுமின்றி, அடிப்படை உரிமைகளை இழந்தும், பாதுகாப்பற்ற நிலையிலும் மீனவர்கள் அன்றாட வாழ்க்கையை நகர்த்தவே போராட வேண்டியிருக்கிறது.தமிழக மீனவர்களின் கடல் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரம் மீட்டெடுக்கப்பட வேண்டும். கடல் வளங்களைப் பாதுகாப்பதுடன், மீனவர்களின் சமூக நலன்களை மேம்படுத்த வேண்டும். 

மக்களுக்கு சத்தான உணவு வழங்கும் மீனவர்களின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். வாழ்க்கையே போர்க்களமான மீனவர்களின் கண்ணீரைத் துடைக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.ஒவ்வொரு நாளும் கடலிலும், கரையிலும் போராடிக் கொண்டிருக்கும் மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி