சென்னையில் மீண்டும்..பீதியை கிளப்பும்..!

6124பார்த்தது
சென்னையில் மீண்டும்..பீதியை கிளப்பும்..!
தமிழ்நாட்டில் இன்று 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதுடன், கோயம்புத்தூரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்தது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது. இதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் 841 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 636 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 10 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 187 ஆக உயந்துள்ளது. மேலும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி