மத்திய மோட்டார் வாகன விதிப்படி, இனி 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் பதிவு பெற்ற மருத்துவரிடம் மருத்துவச் சான்றிதழ் பெற்ற பின்னரே, ஓட்டுநர் உரிமம் பெற இயலும் என தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் அறிவித்துள்ளது. பழைய ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்கவும் இந்த உத்தரவு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ சான்றிதழை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.