மது போதையில் பெண் போலீஸ் ரகளை
நுங்கம்பாக்கம், வைகுண்டபுரம், 22 வது தெருவைச் சேர்ந்தவர் திலீப் குமார் (வயது 42) ஜிம் பயிற்சியாளர். அவரை மதுரையைச் சேர்ந்த சுந்தரவல்லி (வயது 39) என்பவர் காதலித்துள்ளார். பின், இருவருக்கும் காதல் முறிவு ஏற்பட்டுள்ளது. போலீசாக வேலை பார்த்த சுந்தரவல்லி, 2016ம் ஆண்டு முதல் வேலைக்கு செல்லவில்லை. கடந்த 11ம் தேதி இரவு, சுந்தரவல்லி மதுபோதையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள திலீப் குமார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் இல்லாததால், அவரது தாய் அமலுவை தாக்கி ரகளை செய்துள்ளார். இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, அமலு புகார் அளித்தார். அங்கு வந்த நுங்கம்பாக்கம் போலீசார் தேவேந்திரன், சிவா ஆகியோர் விசாரணை மேற்கொண்டபோது. போலீசாரையும் சுந்தரவல்லி தாக்கியுள்ளார். புகாரின் அடிப்படையில் நேற்று (செப்.,14) சுந்தரவல்லியை போலீசார் கைது செய்தனர்.