திமுக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு இது - ஓபிஎஸ்

82பார்த்தது
திமுக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு இது - ஓபிஎஸ்
போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய உயர்வுப் பேச்சுவார்த்தையை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போக்குவரத்துப் பணியாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் அனைத்துப் போக்குவரத்துத் தொழிலாளர்களும் பயனடையும் வண்ணம் மீண்டும் நடைமுறைப் படுத்தப்படும்" என்று தி. மு. க. தேர்தல் அறிக்கை எண் 152-ல் கொடுக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இந்தக் கோரிக்கை நிறைவேற்றப் படாததோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கான 15-வது ஊதிய உயர்வு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை பரிசீலிக்கக் கூட தயங்குவது வேதனை அளிக்கிறது.

டேக்ஸ் :