'சென்னை 600028 II' பட நடிகைக்கு திருமணம்

64பார்த்தது
'சென்னை 600028 II' பட நடிகைக்கு திருமணம்
மலையாள நடிகை சனா அல்தாப், நடிகர் ஹக்கிம் ஷாஜகானை நேற்று முன்தினம் (மே 17) திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கேரளாவில் எளிய முறையில் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்று முடிந்தது. ஹக்கிம் 'கடகன்', 'பிரணயா விலாசம்', 'தி டீச்சர்' மற்றும் பல படங்களில் நடித்துள்ளார். அதே போல் நடிகை சனா அல்தாப், விக்ரமாதித்யன், ராணி பத்மினி, ஒடியன் உள்ளிட்ட மலையாள படங்களிலும், சென்னை 600028 II, ஆர்கே நகர், பஞ்சராக்ஷரம் ஆகிய தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். சென்னை 600028 II படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருப்பார். புதுமணத் தம்பதிகளுக்கு ஏராளமான பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.