யூடியூப் வீடியோக்களை வழங்க சாட்டை துரைமுருகனுக்கு உத்தரவு

63691பார்த்தது
யூடியூப் வீடியோக்களை வழங்க சாட்டை துரைமுருகனுக்கு உத்தரவு
யூடியூப் வீடியோ பதிவுகளை வழங்க நாம் தமிழர் கட்சி கொள்கை பரப்பு செயலாளரும், பிரபல யூடியூபருமான சாட்டை துரைமுருகனுக்கு என்ஐஏ உத்தரவிட்டுள்ளது. சாட்டை துரைமுருகன் அரசியல், சினிமா தொடர்புடைய விவாதம், பேட்டிகள் உள்ளிட்டவற்றை தனது 'சாட்டை யூடியூப்' சானலில் பதிவிட்டு வருகிறார். இந்த சானலை 1.2 மில்லியன் சந்தாதாரர்கள் பின்பற்றி வருகின்றனர். இந்த நிலையில், விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பு உள்ளதாகக் கூறி, சமீபத்தில் என்ஐஏ அதிகாரிகள் துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி, தென்னகம் விஷ்ணு உள்ளிட்ட நாதகவினர் வீடுகளில் சோதனை நடத்தியிருந்தனர். விசாரணைக்கும் நேரில் ஆஜராகி இருந்தனர். இதனிடையே தற்போது, சாட்டை துரைமுருகன் இதுவரை பதிவு செய்த அனைத்து வீடியோக்களையும் வழங்க என்ஐஏ அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி