சண்டிகர் மேயர் தேர்தல்.. நீதிமன்றம் அதிரடி

60பார்த்தது
சண்டிகர் மேயர் தேர்தல்.. நீதிமன்றம் அதிரடி
சண்டிகர் மேயர் தேர்தல் முடிவுகள் குறத்தி ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. வாக்குசீட்டை சரிபார்க்கும்போது ஏன் கேமராவை உற்று பார்த்தீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளது. விசாரணைக்கு ஆஜரான தேர்தல் நடத்தும் அதிகாரி 8 வாக்குச்சீட்டுகளில் x என குறியிட்டதை தலைமை நீதிபதியிடம் ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் தேர்தல் நடத்தும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். தேர்தலில் பதியப்பட்ட அனைத்து வாக்குச் சீட்டுகளையும் நாளை சமர்ப்பிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி