தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்

84பார்த்தது
தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்
தென்னிந்தியப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (25.02.2024) தென்தமிழக கடலோரப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென் தமிழக உள் மாவட்டங்கள், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி