11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

577பார்த்தது
11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைகால் ஆகிய பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தி.மலை, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கையில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தொடர்புடைய செய்தி