13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

1465பார்த்தது
13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நேற்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை ஆகிய 13 மாவட்டங்களின் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி