தூங்கி கொண்டிருந்த முதியவர் மீது ஏறிய கார் (வீடியோ)

45956பார்த்தது
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. சினேகா நகர் ஐசிஐசிஐ வங்கி அருகே சாலையோரம் முதியவர் ஒருவர் படுத்திருந்தார்.அப்போது அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை ஒருவர் ஓட்ட முயற்சித்தார். இதில் படுத்திருந்த முதியவர் மீது கார் ஏற்றப்பட்டது. கார் ஓட்டுநர் கவனிக்காததால் இந்த விபத்து நடந்துள்ளது. இதில், முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி