டார்க் சாக்லேட் என்பது செயற்கை சர்க்கரை சேர்க்காமல் கோக்கோ பீன்ஸிலிருந்து நேரடியாக தயாரிக்கப்படுகிறது. இதில் இரும்பு, தாமிரம், துத்தநாகம், பாஸ்பரஸ் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. தினமும் டார்க் சாக்லேட் சாப்பிடுவது இதயத்தை பாதுகாக்கும் என்ற போதிலும் தற்போது சந்தைகளில் கிடைக்கும் சாக்லேட்டுகளில் சர்க்கரைகள் அதிக அளவில் சேர்க்கப்படுகிறது. எனவே சாக்லேட் வாங்கும் பொழுது கவனத்துடன் பார்த்து வாங்க வேண்டும்.