சிறுவன் ஒருவன் விபத்தில் சிக்கிய பதறவைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. குஜராத்தின் சூரத் நகரின் திண்டோலி பகுதியில் புதன்கிழமை காலை இந்த விபத்து நடந்துள்ளது. 5 வயது சிறுவன் திடீரென ஓடி சாலையை கடக்கும்போது, அவ்வழியாக வந்த டெம்போ லாரி சிறுவன் மீது மோதியது. இந்த விபத்தில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய சிறுவனின் கை துண்டானது. விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.