பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் வெடித்தது குறைந்த வீரியம் கொண்ட IED வெடிகுண்டு தான் என்று காவல்துறை அறிவித்துள்ளது. டைமர் பயன்படுத்தி உணவகத்தில் வெடிகுண்டு வெடிக்க வைக்கப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். வெடிகுண்டு வைத்த நபரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பெங்களூரு நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.