சுடு நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

2580பார்த்தது
சுடு நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
சராசரியாக ஒருவர் தினமும் 2.5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிலும் வெதுவெதுப்பான நீர் அருந்துவதால் நிறைய நன்மைகள் கிடைக்கும். மூக்கடைப்பு நீங்க வெதுவெதுப்பான தண்ணீரை அருந்தலாம். சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரை அருந்தினால் அதிலுள்ள ஆவி மூக்கில் உள்ள மியூகஸ் மெம்ப்ரேனில் ஏற்பட்டிருக்கும் அடைப்பை நீக்கும். எளிதாக சுவாசிக்க முடியும். ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீர் மூக்கொழுகுதலை நிறுத்தும். இருமல், தொண்டை வலிக்கு இதம் தரும். மன அழுத்தத்தை குறைக்கவும் வெதுவெதுப்பான நீரை அருந்தலாம்.