ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இன்று நடந்த 5ஆம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியை 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
ஆஸ்திரேலியா. இதன் மூலம், ஐசிசியின் நான்கு விதமான கோப்பைகளை வென்ற முதல் அணி என்ற வரலாற்று சாதனையை ஆஸ்திரேலிய அணி படைத்துள்ளது. முன்னதாக, 1987, 1999, 2003, 2007, 2015ஆம் ஆண்டுகளில் நடந்த ஒரு நாள் உலகக்கோப்பை, 2006, 2009ஆம் ஆண்டுகளில் சாம்பியன்ஸ் டிராபி, 2021ஆம் ஆண்டில் டி20 உலகக்கோப்பையை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.