தெலுங்கு ஹீரோவை இயக்கும் அட்லீ?

62பார்த்தது
தெலுங்கு ஹீரோவை இயக்கும் அட்லீ?
தமிழில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் அட்லீ, அடுத்தடுத்து நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கினார். இதனையடுத்து பாலிவுட்டில் கால் பதித்த அவர் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்தார். இந்நிலையில் தெலுங்கில் மாஸ் ஹீரோவாக இருக்கும் அல்லு அர்ஜுனை வைத்து படம் இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அல்லு அர்ஜுன் தற்போது புஸ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து திரி விக்ரம், சந்தீப் ரெட்டி வங்கா ஆகியோரின் படத்தில் நடித்து முடித்துவிட்டு இந்தப்படத்தில் நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி