தமிழில் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அசின். அதன் பிறகு இவர்
கஜினி, வரலாறு, போக்கிரி, ஆழ்வார், தசாவதாரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் தவிர மற்ற மொழிப் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
திருமணத்திற்கு பிறகு படங்களில் இருந்து ஒதுங்கிய அசின், மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவை 2016இல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரின் என்ற மகள் உள்ளார். இந்நிலையில் மகளின் ஆறாவது பிறந்தநாள் விழாவை கொண்டாடி உள்ளார். பிறந்தநாள் புகைப்படத்தை அசின் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.