திக சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா

525பார்த்தது
பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு திராவிடர் கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு குடியரசு நூற்றாண்டு விழா பரப்புரை கூட்டம், தி. க மாவட்ட செயலாளர் தங்கராசு தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் திராவிடர் கழகத்தின் தலைமைக் கழக சொற்பொழிவாளர் இளங்கோவன் மற்றும் சிந்தனைச் செல்வன் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் ஆகியோர் கலந்து
கொண்டனர். இதில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு குறித்தும், குடியரசு நூற்றாண்டு குறித்தும் தங்கள் கருத்துகளை பதிவு செய்து பேசினார்கள். மேலும் இதில் திராவிடர் கழகத்தின் பங்கு என்ன சுயமரியாதை இயக்கத்தின் செயல்பாடுகள் என்ன என்பது குறித்தும், மேலும் திராவிட மாடல் ஆட்சி குறித்தும் எடுத்துரைத்து பேசினார்கள்.

மேலும் , நிகழ்ச்சியில் மந்திரம் அல்ல தந்திரமே என்ற அறிவியல் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது திராவிடர் கழகத்தின் மாவட்ட இளைஞரணி தலைவர் தமிழரசன், பொதுக்குழு உறுப்பினர் அரங்கராசன், மாவட்ட அமைப்பாளர் துரைசாமி, நகரச் செயலாளர் ஆதிசிவம், மற்றும் ஒன்றிய செயலாளர்கள் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சியை சார்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி