கோவை மக்களவை தொகுதியில் அண்ணாமலை போட்டி?

60பார்த்தது
கோவை மக்களவை தொகுதியில் அண்ணாமலை போட்டி?
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான கட்சி பணிகளை முடுக்கிவிடும் வகையில் தமிழக நாடாளுமன்ற பொறுப்பாளர்கள் கூட்டம் கோவையில் நடந்துள்ளது. அதில் தேர்தலை எப்படி எதிர்கொள்வது குறித்த அறிவுரைகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் எத்தனை கட்சிகள் கூட்டணிக்கு வருகிறார்கள். எந்தெந்த கட்சிகள் எல்லாம் வருவார்கள் என்பது குறித்தெல்லாம் தேசிய தலைமைதான் அறிவிக்கும் என அவர் கூறியுள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலை விரும்பி கோவை மக்களவை தொகுதியில் போட்டியிட்டால் நல்லதுதான் என அவர் கூறிள்ளார்.

தொடர்புடைய செய்தி