அம்பானி வீட்டின் கல்யாண பத்திரிக்கை (வீடியோ)

63பார்த்தது
நாட்டின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் வீட்டின் திருமண பத்திரிக்கை தொடர்பான வீடியோ சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்ட்டிற்கும் ஜூலை 12ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இந்த திருமணத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில், இவர்களது திருமண பத்திரிக்கை அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது. பூஜை அறை போல் காட்சியளிக்கும் பெட்டியைத் திறந்தவுடன் ஓம் என்ற மந்திரம் கேட்கிறது. வெள்ளியால் ஆன கோவில், உள்ளே விநாயகர், துர்க்கை, விஷ்ணு, முருகன் சிலைகள் உள்ளன. விருந்தினர்களுக்கு அம்பானி குடும்பமே இவற்றை வழங்கி வருகிறது.

தொடர்புடைய செய்தி