திருச்செந்தூர் கோவிலில் நடிகை பிரியா ஆனந்த் சாமி தரிசனம்

71பார்த்தது
திருச்செந்தூர் கோவிலில் நடிகை பிரியா ஆனந்த் சாமி தரிசனம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று முன்தினம் மாலையில் நடிகை பிரியா ஆனந்த் வந்தார். அவர் கோவிலுக்குள் சென்று மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் வெளியே வந்த பிரியா ஆனந்த், கோவில் யானை தெய்வானையிடம் ஆசி பெற்றார்.

அப்போது நடிகையை பார்த்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அவருடன் செல்பி எடுத்தனர். அதேபோல் கோவில் வளாகத்தில் ஊட்டி மலைப்பகுதியை சேர்ந்த படுகர் இன மக்கள் தங்கள் பாரம்பரிய மலைவாழ் நடனமான படுகு நடனமாடினர். இதை நடிகை பிரியா ஆனந்த் பக்தர்களுடன் பார்த்து ரசித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி