புத்தர் கூறும் 6 வாழ்க்கை பாடங்கள்!

60பார்த்தது
புத்தர் கூறும் 6 வாழ்க்கை பாடங்கள்!
1. "முழு மனதோடு ஈடுபட வேண்டும்:" எந்த செயலை செய்தாலும் மனதை ஒருமுகப்படுத்தி அதில் முழு மனதோடு ஈடுபட வேண்டுமென புத்தர் வலியுறுத்துகிறார்.
2. "எதுவும் நிரந்தரம் இல்லை என்பதை ஏற்று கொள்ளுங்கள்:" புத்தரின் போதனைகளுள் இது மிகவும் முக்கியமானதாகும். அனைவரும் எப்போதும் மாற்றத்திற்கு தயாராக இருக்க வேண்டுமென அவர் குறிப்பிடுகிறார்.
3. "இரக்க குணம்:" எப்போதும் ஒருவர் இரக்க குணத்துடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும்.
4. "அகந்தையை துறக்க வேண்டும்:" நான் என்ற அகந்தையை துறப்பது பற்றி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புத்தர் தெளிவாக உணர்ந்து வலியுறுத்தியிருக்கிறார்.
5. "பற்றற்று இருக்க வேண்டும்:" ஒரு மனிதர் எதன் மீதும் பற்றற்று இருத்தாலே நிரந்தர ஞானத்திற்கான திறவுகோல் என்பதை புத்தர் மட்டுமின்றி பல்வேறு மகான்களும் வலியுறுத்தியுள்ளனர்.
6. "உங்கள் இருப்பிற்கான காரணத்தை அறியவேண்டும்:" ஒருவர் தன்னுடைய பிறப்பிற்கான காரணத்தை அறிய முற்படவேண்டும் என புத்தர் தெளிவாக வலியுறுத்துகிறார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி