இரானி கோப்பை தொடர் வரும் அக்.1 - 5ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரில் மும்பை அணிக்காக இளம் வீரர் முஷீர் கான் விளையாட இருந்தார். இதற்காக உத்திரப் பிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து லக்னோ செல்லும்போது கார் விபத்தில் சிக்கியுள்ளார். இதில் அவரது கழுத்துப் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக அவர் இரானி கோப்பை தொடர் மற்றும் அக்.11ம் தேதி தொடங்கும் ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாட முடியாது என கூறப்படுகிறது.