விஜயகாந்த் உருவப்படம் அருகில் அமர்ந்த வெள்ளை கிளி

66273பார்த்தது
விஜயகாந்த் உருவப்படம் அருகில் அமர்ந்த வெள்ளை கிளி
நடிகர் விஜயகாந்த் இல்லத்தில் உள்ள அவரது உருவப்படத்திற்கு, அவர் ஆசையாய் வளர்த்த வெள்ளை கிளி அஞ்சலி செலுத்தியது. உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் டிச.28இல் காலமானார். விஜயகாந்த் வளர்த்து வந்த வெள்ளை கிளி ஒன்று, "கேப்டன்.. கேப்டன்.." என அவரைப் வாய் நிறைய கூப்பிட்டதால், அதற்கு கேப்டன் என்று பெயர் வைத்து விட்டார். அவர் மறைந்ததால், அவருடைய உருவப் படத்தையே சுற்றி சுற்றி வந்த அந்த கிளி, திடீரென படத்தின் முன்பாக அமர்ந்தது பார்ப்போரை கண்கலங்க செய்தது.

தொடர்புடைய செய்தி