நாய் கவ்விய லாட்டரி சீட்டுக்கு விழுந்த பரிசு

60120பார்த்தது
நாய் கவ்விய லாட்டரி சீட்டுக்கு விழுந்த பரிசு
தெற்கு சீனாவின் குவாங்டாங் நகரில், நடை பயிற்சி சென்று கொண்டிருந்தார் லின் என்ற பெண். அப்போது அவர் தனது வளர்ப்பு நாயையும் உடன் அழைத்து சென்றிருந்தார். நடந்து சென்றுகொண்டிருக்கும்போது திடீரென ஒரு கடைக்குள் புகுந்த அந்த நாய் அங்கிருந்த லாட்டரி சீட்டு ஒன்றை கவ்வியது. இதனால் அந்த சீட்டை அப்பெண் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் அதனை சுரண்டி பார்த்தபோது 132 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.11,521.92) பரிசு விழுந்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த லின் தனது நாய்க்கு அந்த பணத்தில் சரிசமமாக உணவு வாங்கிக் கொடுத்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி