வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 280 கி.மீ தொலைவில் கிழக்கு- தென்கிழக்கு திசையில் மையம் கொண்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 15 கி.மீ. வேகத்தில் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாகவும் தெற்கு ஆந்திரா கடற்கரையில் புதுச்சேரி- நெல்லூர் இடையே நாளை (அக்.17) அதிகாலை சென்னை அருகே கரையை கடத்த கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.