டெல்லியை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த 2019 அக்டோபர் மாதம் காணாமல் போனார். பின்னர் 2020 பிப்ரவரியில் போலீசார் அவரை மீட்டனர். சிறுமியை கடத்தி சென்ற 23 வயது பெண், 4 மாதங்கள் அவரை வீட்டில் அடைத்து வைத்து பணத்துக்காக இரண்டு இளைஞர்களுக்கு விருந்தாக்கியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஆண்டுக்கணக்கில் தலைமறைவாக இருந்த அந்த பெண்ணை போலீசார் கடந்த சனிக்கிழமை (நவ. 09) கைது செய்துள்ளனர்.