5 நாட்கள் - தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி

77பார்த்தது
5 நாட்கள் - தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் 'நீங்களும் ஒரு தொழிலதிபராகலாம்' தொழில் முனைவோர் மேம்பாட்டு குறித்த பயிற்சி வரும் 8ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித்தகுதி 10ஆம் வகுப்புடன் விண்ணப்பிக்கலாம். இது பற்றி கூடுதல் விவரங்களை அறிய விரும்புவோர் www.editn.in என்ற வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 600 032 என்ற முகவரியில் நேரில் செல்லலாம். 7010143022, 8668102600 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.

தொடர்புடைய செய்தி