இன்று ஒரே நாளில் சென்னை மற்றும் மதுரையில் ரூ.180 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொதிகை ரயிலில் 30 கிலோ மெத்தபெட்டமைன் காலையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற போது பெரும் அளவிலான போதைப்பொருட்கள் சிக்கின. பறிமுதல் செய்யப்பட்டவை ஐஸ் அல்லது கிரிஸ்டல் மெத் என அழைக்கப்படும் போதைப்பொருள் ஆகும். போதை பொருள் கடத்திய நபர்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.