தயாராகிறது 'கைதி 2' - கார்த்தி கொடுத்த அப்டேட்

76பார்த்தது
தயாராகிறது 'கைதி 2' - கார்த்தி கொடுத்த அப்டேட்
கார்த்தி தற்போது தனது 27 ஆவது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடிக்க, அரவிந்த்சாமி , ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சி ஒன்றில் கைதி 2 படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு கார்த்தி, டில்லி திரும்ப வருவார், ‘கைதி 2’ படத்திற்கான பணிகளை அடுத்த வருடம் தொடங்கவுள்ளோம் என தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்ச்சாகமடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி