உலகிலேயே மிக உயரமான சாலை இந்தியாவில் உள்ளது. லடாக்கின் உம்லிங் லா என்கிற கணவாய் வழியே அமைக்கப்பட்டுள்ள இந்த சாலை தான் உலகின் மிக உயரமான மோட்டார் வாகன பயன்பாட்டு சாலை. இதன் நீளம் 52 கிலோமீட்டர். கடல் மட்டத்திலிருந்து 19,024 அடி அதாவது 5,799 மீட்டர் உயரத்தில் உள்ளது. சிந்து நதிக்கும், கோயுல் லுங்பாவுக்கும் இடையே உள்ள முகடு வழியாக செல்கிறது. இந்த சாலையானது ஆயுதப் படைகளுக்கு உதவுவது மட்டுமின்றி, சுற்றுலாவையும் மேம்படுத்துகிறது.