மோடி பதவியேற்பு விழாவில் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்பு?

56பார்த்தது
மோடி பதவியேற்பு விழாவில் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்பு?
நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்க உள்ளார் என்ரு தகவல் வெளியாகி உள்ளது . மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிப்பதாக 'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்த பல்வேறு கட்சிகள் அறிவித்துள்ளன. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இன்று காலை ஜனாதிபதி மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து மோடியின் பதவியேற்பு விழாவிற்கான அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் மோடியின் பதவியேற்பு விழாவில் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.