பிரதமரை தோற்கடிக்க வேண்டும்.. சுப்பிரமணிய சாமி

78பார்த்தது
பிரதமரை தோற்கடிக்க வேண்டும்.. சுப்பிரமணிய சாமி
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தமிழகத்தில் 23 தொகுதிகளில் போட்டியிடும் பாஜகவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என கேட்டதிற்கு, அதன் முழு விவரம் என்னிடம் இல்லை, ஆனால் நைனார் நாகேந்திரன் வெற்றி பெறுவார் என கூறியுள்ளார். மேலும் நாடு முடலுவதும் 400 இடங்களை கைப்பற்றி பாஜக வெல்லும் என சொல்கிறார்கள் இதுகுறித்து தங்களுடைய கருத்து என்ன என கேட்டதற்கு,நக்கலாக சிரித்துவிட்டு 272 என்பதுதான் மெஜாரிட்டி அது கிடைத்தால் போதும் என கூறியுள்ளார். மேலும் மோடி மீண்டும் 3வது முறையாக பிரதமராக வருவாரா என்ற கேள்விக்கு, அவரை ஜெயிக்கவைக்க கூடாது தோற்கடிக்க வேண்டும் என நக்கலாக கூறி சென்றார்.