விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 14 வது வார்டு கே கரிசல்குளம் கிராமத்தில் சேதம் அடைந்த சமுதாயக்கூடத்தை சுமார் 16 லட்சம் மதிப்பீட்டில் மராமத்து செய்த நிலையில் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக காரியாபட்டி பேரூராட்சி சேர்மன் ஆர். கே. செந்தில் திறந்து வைத்தார். உடன் பேரூராட்சி அலுவலர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.