காட்டுப்பன்றியை விரட்டுவது குறித்த செயல்முறை விளக்க பயிற்சி

73பார்த்தது
விருதுநகர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் காட்டுப் பன்றிகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விவசாயிகள் மன உளைச்சலாகி நஷ்டம் அடைந்து வருகின்றனர்.

நெல், வேர்கடலை, சிறுதானியம், கத்தரி உள்ளிட்ட சாகுபடி இடங்களில் காட்டுப் பன்றிகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றனர். காட்டுப்பன்றிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முள்வேலி, மின்சார வேலி, வண்ணத்துணிகள் ஆகியவற்றை வயலை சுற்றி கட்டுதல் மற்றும் பல்வேறு ரசாயன மருந்துகள் பயன்படுத்துவதன பல வழிகளில் மேற்கொள்ளும் விவசாயிகளின் முயற்சி தோல்வி அடைந்து வந்தது.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ராயர்பட்டி கிராமத்தில் கம்பிக்குடி கால்வாய் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் விவசாயிகள் மத்தியில் வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு செயல்முறை விளக்க பயிற்சி நடைபெற்றது.

அதில் வேலூர் விரிஞ்சிபுரம் வேளாண் ஆராய்ச்சி நிலையம் சார்பில் காட்டுப்பன்றியை விரட்ட இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மருந்தை பயன்படுத்தும் முறை குறித்து வேளாண் அதிகாரிகள் விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம் அளித்தனர்.
Job Suitcase

Jobs near you