விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சங்கரலிங்கம் இவர் சம்பவத்தினத்தன்று இரவு தனது வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்கச் சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. அக்கம், பக்கம் தேடியும் கிடைக்காததால் சங்கரலிங்கம் வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் இரவு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.