வத்திராயிருப்பு அருகே அரசு பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்ச்சி
வத்திராயிருப்பு அருகே மேலகோபாலபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித் துறை சார்பில் தமிழ்க் கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமையாசிரியர் சீதாலெட்சுமி தலைமை வகித்தார். முதுகலை தமிழாசியர் மகேஸ்வரி வரவேற்றார். ஓய்வு பெற்ற தமிழாசிரியர் புலவர் செ. பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தமிழ் இலக்கியம், பண்பாடு, வரலாறு குறித்து மாணவர்களுக்கு விளக்கினார்.
தமிழ் கூடல் நிகழ்ச்சியில் நடந்த இலக்கிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மகாலட்சுமி அரையாண்டுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். பட்டதாரி ஆசிரியர் பத்மா நன்றி கூறினார்.
உதவி தலைமை ஆசிரியர் அய்யனார், முதுகலை ஆசிரியர் தங்கராஜ், பட்டதாரி ஆசிரியர் சுப்புத்தாய் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்தனர்.