பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் வகையில் மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இக்கல்லூரியின் சார்பாக 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்ற வேலைவாய்ப்பு முகாம்களை நேரடியாகவும், இணையத்தின் வாயிலாகவும் நடத்தி 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணியாற்ற 558 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு இ. எஸ். கல்விக்குழுமங்களின் நிர்வாகத்தலைவர் மற்றும் செயலாளர் எஸ். செந்தில்குமார், பணி நியமன ஆணையை வழங்கி பாராட்டினார். இவ்விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.