போலீசார் இன்று தபால் ஓட்டு போடலாம்

68பார்த்தது
போலீசார் இன்று தபால் ஓட்டு போடலாம்
லோக்சபா தேர்தலையொட்டி விழுப்புரம் தொகுதியில் அல்லாத பிற தொகுதி ஓட்டுரிமை பெற்ற அலுவலர்கள் மற்றும் போலீசார் இன்று தபால் ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் (தனி) லோக்சபா தொகுதி தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள பல்வேறு நிலையிலான அலுவலர்கள், போலீசார் விழுப்புரம் தொகுதியில் அல்லாத பிற தொகுதிகளில் ஓட்டுரிமை பெற்றவர்கள் தங்களின் தபால் ஓட்டுகளை பதிவு செய்ய விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் தபால் ஓட்டு போட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இங்கு, இன்று 14ம் தேதி காலை 10: 00 மணி முதல் மாலை 5: 00 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும் என மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி