சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 16ம் தேதி திறப்பு

79பார்த்தது
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 16ம் தேதி திறப்பு
புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை, பங்குனி உத்திர திருவிழா, ஓணம் போன்ற நாட்களில் கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். இவை தவிர தமிழ் மாதத்தின் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

அதன்படி ஐப்பசி மாத பூஜைக்காக நடை வரும் 16-ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் ராஜீவரரு தலைமையில், மேல்சாந்தி பி. என். மகேஷ் கோயில் நடையை திறந்து வைத்து தீபாராதனை காண்பிக்கிறார். பின்னர் 21-ஆம் தேதி இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.

அதனை தொடர்ந்து மன்னர் பாலராம வர்ம மகராஜா பிறந்த நாளில் நடைபெறும் விசேஷ பூஜையான சித்திர ஆட்டத் திருநாளுக்காக அக். 30-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டு 31 -ஆம் தேதி இரவு சாத்தப்படுகிறது. ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.