ஏரி கால்வாயில் விழுந்து கூலித் தொழிலாளி பலி

57பார்த்தது
ஏரி கால்வாயில் விழுந்து கூலித் தொழிலாளி பலி
செஞ்சி அடுத்த மொடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் அய்யப்பன், 33; கூலித் தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு மொடையூர் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மேடை நாடகம் நடந்தது. அய்யப்பன் நாடகத்தை பார்த்துவிட்டு அதிகாலை 4: 00 மணியளவில் அங்குள்ள ஏரி கால்வாய் தடுப்பு சுவர் மீது படுத்து துாங்கினார். துாக்க கலக்கத்தில் தவறி கால்வாயில் விழுந்தவர், நீரில் மூழ்கி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி