சமூக நீதி நாள் முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ஷ்ரேயா குப்தா, தலைமையில் காவல்துறை அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த உறுதி மொழியில் "பிறப்புக்கும் எல்லா உயிருக்கும் என்ற அன்பு நெறியையும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறைகளாக கடைப்பிடிப்பேன். சுயமரியாதை ஆளுமை திறனும் பகுத்தறிவு பார்வையில் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும். சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன். மானுடத்தின் மீது பற்றையும், மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன். சமூக நீதியை அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன். என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், அமைச்சு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.